கோவை. மே. 1 – இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதலே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி, ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. தற்போதைய கடலூர் மதுரை தஞ்சை திருச்சி திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் திருவள்ளுவரின் அதிகபட்சமாக 113 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வருகிற 4-ம் தேதி தொடங்குகிறது. வருகிற 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி வெயில் நீடிக்கும் இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும் சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியை தாண்டி விடும். இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசும் இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக காணப்படும். அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வருகிற 11-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தர்பூசணி இளநீர் மோர் உள்ளிட்ட பானங்கள் பருகுவது உடலுக்கு நல்லது என கூறியுள்ளனர்.

Share to your friends.