கோவை. ஏப்ரல். 20- இன்று இரவு முதல் ஊரடங்கு தொடங்குகிறது. இரவு நேரங்களில் காரணமின்றி சுற்ற கூடிய நபர்களை வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்ய காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது      
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதால், அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இன்று முதல் இரவு நேர ஊரடங்கு இரவு, 10:00 மணி முதல் அமலுக்கு வருகிறது. அதிகாலை, 04:00 மணி வரை ஊரடங்கு தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இரவு ஊரடங்கு அமலுக்கு வருவதையடுத்து, கோவை மாநகர பகுதியில் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையிலும், மாவட்ட பகுதியில் எஸ்.பி., செல்வநாகரத்தினம் தலைமையிலும், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், ”மாநகர பகுதிகளில் இரவு ஊரடங்கின்போது, சுமார், 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படும். இரவு ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில், அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் ரோட்டில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்,” என்றார்.

Share to your friends.