நடிகர், சமூக ஆர்வலர் விவேக் அவர்களின் மறைவையொட்டி கோவையில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அவரது நினைவாக பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் தரப்பட்டது.
நடிகர் என்பதையும் தாண்டி நாட்டு மக்கள் நலனிலும் அக்கரை கொண்ட
நல்ல மனிதர்.
மேதகு அப்துல் கலாம் அவர்களின் அன்பைப் பெற்றவர்.
ஒரு கோடி மரம் நட வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கி முப்பத்தி மூன்று இலட்சம் மரங்களுக்கு மேல் நட்ட,
இயற்கை ஆர்வலர்.
அவர் நட்ட மரங்கள் நிழல் கொடுக்கும் போதும்,
கனி கொடுக்கும் போதும்,
பயன் கொடுக்கும் தருணங்களில் எல்லாம்
இருப்பார் விவேக்.
அவரது புனித ஆன்மா
இறைவனின் கரத்திலும்
இயற்கையின் மடியிலும்
இளைப்பாறுதல் பெறட்டும்.
அவரது கனவு நனவாக வேண்டும் என்று ISDO தமிழக பொறுப்பாளர் லாசர் ராஜன் தெரிவித்தார்.

Share to your friends.