கோவை. ஏப்ரல். 15 -ஈரோடு மாவட்டம் சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியை சேர்ந்தவர் கணேசன் 73, காய்கறி வியாபாரி. இவர் கடந்த 13-ம் தேதி சித்தோட்டில் இருந்து ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அப்போது பஸ் கண்டக்டர் குமார் 34, அந்த பேருந்தில் பணிபுரிந்தார். அப்பொழுது டிக்கெட் கேட்டதற்கு சில்லறையாக தரும்படி கண்டக்டர் குமார் கூறினார். அப்படி இல்லை என்றால் வண்டியை விட்டுக் கீழே இறங்கு என கூறினார். இந்த நிலையில் ஈரோடு பேருந்துநிலையம் வந்தது. தொடர்ந்து கண்டக்டர் குமார் முதியவரை தாக்கவும் செய்தார். இதை வீடியோ எடுத்த பயணிகள் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்டுத் தீ போல் பரவியது. இந்த நிலையில் ஈரோடு போக்குவரத்து பொது மேலாளர் முதியவரை தாக்கிய கண்டக்டர் குமாரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று மனித உரிமை ஆணையத்தில் இருந்து கோவை போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு இதுகுறித்து விசாரணை செய்த மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் போக்குவரத்து பணியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share to your friends.