கோவை. ஏப்ரல். 14- கோவை:நியுசிலாந்து உள்பட நான்கு நாடுகளுக்கான சர்வதேச தபால் சேவையை தபால்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்திய தபால்துறை, சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் சேவையை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு நாடுகளுக்கு தபால்களை அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.வைரஸ் பரவலால், நியுசிலாந்து, லக்சம்பர்க், மங்கோலியா, செர்பியா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.
இதனால், இந்த நாடுகளுக்கான அனைத்து வகை தபால் முன்பதிவையும் தபால்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் தபால்துறை தெரிவித்துள்ளது.
