கோவை. ஏப்ரல். 12- கோவை காந்திபுரம் பகுதியில் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் உள்ளே ராஜா உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் நேற்று பத்து பதினைந்து மணி அளவில் பயணிகள் உணவருந்திக் கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் லதா ரோந்து பணியில் ஈடுபடுகிறார் எனக்கூறி போலீசார் விரட்டினர். பின்பு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை உள்ளே சென்று சரமாரியாக லத்தியால் தாக்கினர். அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் மூலமாக பரபரப்பானது. இந்த நிலையில் இன்று கோவை மாநகர போலீஸ் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் கமிஷனர் துணை ஆணையர் மூலமாக விசாரிப்பதற்கு குழு அமைத்துள்ளார். அத்துமீறி தாக்குதல் நடத்திய முத்து என்கிற சப்-இன்ஸ்பெக்டர் காவல்துறை கட்டு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பொதுமக்கள் அனைவரும் லதா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முத்து பணியிட நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.