கோவை. ஏப்ரல். 2 – மேற்கு மண்டலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 31,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஐ.ஜி அமல்ராஜ் தெரிவித்தார். மேற்கு மண்டல ஐ.ஜியாக சென்னை போலீஸ் தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வந்த அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அமல்ராஜ் மேற்கு மண்டல ஐ.ஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்:- தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டலத்தில் 31,000 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவர்களில் 17 ஆயிரம் போலீசார், 10,000 என்.சி.சி மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள். மற்றும் 4000 துணை ராணுவத்தினர் அடங்குவர் என்றார்.