கோவை. மார்ச். 28- தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஏற்கனவே 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். மொத்தம் 300 கம்பெனி ராணுவப்படையினர் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. இதையடுத்து இன்று காலை அகர்தலாவில் இருந்து 10 துணை இராணுவக் கம்பெனிகள், ஜெய்ப்பூரில் இருந்து 8 துணை இராணுவக் கம்பெனிகள், குவாலியரில் இருந்து 15 துணை ராணுவ கம்பெனிகள், ஜாம்ஷெட்பூரில் இருந்து 8 துணை ராணுவ கம்பெனிகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களில் 4 துணை ராணுவ படையினர் சென்னை இன்று இரவு வருகின்றனர். இதைத் தொடர்ந்து பஞ்சாபில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை கோவை மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் அவகளை அழைத்துச் சென்று அவளுக்கான இடங்களை ஒதுக்கி தரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ஒரு மாத காலத்திற்கு பணியில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.