கோவை. மார்ச்.24- கோவை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் சாவடியை கணக்கிடப்பட்டுள்ளது அதற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பதற்றம் மிகுந்தவை என 861 ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள், கோவை மாவட்டத்தில் முழு வீச்சில் நடக்கின்றன. ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணியை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதிகளை செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 4427 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றம் மிகுந்த ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மேட்டுப்பாளையத்தில் 17 இடங்களில் இருக்கும் 51 ஓட்டுச்சாவடிகள், சூலுாரில் 11 இடங்களில் 52 ஓட்டுச்சாவடிகள், கவுண்டம்பாளையத்தில் 26 இடங்களில் 153 ஓட்டுச்சாவடிகள், கோவை வடக்கில் 20 இடங்களில் 153 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.தொண்டாமுத்துாரில் 19 இடங்களில் 137 ஓட்டுச்சாவடி, கோவை தெற்கில் 17 இடங்களில் 125 ஓட்டுச்சாவடி, சிங்காநல்லுாரில் 14 இடங்களில் உள்ள 91 ஓட்டுச்சாவடிகள், கிணத்துக்கடவில் 9 இடங்களில் 59 ஓட்டுச்சாவடி, பொள்ளாச்சியில் 6 இடங்களில் 28 ஓட்டுச்சாவடி, வால்பாறையில் 7 இடங்களில் 12 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.இந்த ஓட்டுச்சாவடிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், கூடுதலாக அலுவலர்களை பணியமர்த்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share to your friends.