கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரச்சார வாகனத்தை , ரெட்பீல்டு பகுதியில் வைத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் , தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இன்று ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பின் ரெட்பீலடு பகுதிக்கு வாகனத்தில் வந்து கொண்டு இருந்த போது பறக்கும் படை அதிகாரி சாமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் , திடீரென வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் பணம் உட்பட எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது இது வழக்கமான சோதனை தான் என்றும் அனைத்து வேட்பாளர்கள் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்

Share to your friends.