கோவை. மார்ச். 4 – இன்று மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீரென்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஆதலால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் ஆகவும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்து வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை சேகரித்து அவைகள் அனைத்தும் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேகரித்து மொத்தமாக அவை தரம்பிரித்து அதற்கு ஏற்றார் போல அவைகள் அப்புறப்படுத்தப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு குப்பை குவியல் அதிகமாக இருந்ததால் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பொழுதும் அந்த பகுதி மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. அதேபோல இன்று மாலை திடீரென வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அவை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அதனால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகை மண்டலம் சூழ்ந்தது மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் சிங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share to your friends.