வரும் 25 ம் தேதி பிரதமர் பங்கேற்கின்ற பொது கூட்ட மேடைக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர்கள் வானதி சீனிவாசன் செல்வகுமார் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் வி கே சிங், கிரன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
தொடர்ந்து தமிழகத்திற்கு பா.ஜ.க முக்கிய தலைவர்கள் வருகின்றனர்.

10 நாட்களுக்கு முன்பு தேர்தல் தேர்தல் பிரச்சார கூட்டத்தை தலைவர் நட்டா துவங்கி வைத்துள்ளார்.
தேர்தல் பணிகளை முடுக்கிவிட சென்னை, கோவை இரு இடங்களிலும் நிர்வாகிகளுடன் கூட்டங்கள் நடத்த இருக்கின்றோம்.
முதல்வர் பிரதமர் சந்திப்பில்
10 நிமிடம் என்ன பேசினார்கள் என தெரியவில்லை
பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாக்கு சதவீத்த்தை பாதிக்காது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது .
மாநில அரசுகளை வரிகளை குறைக்க அறிவுறுத்தி இருக்கின்றோம்
பா.ஜ.க பூரணமதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது
தேவேந்திர குல வேளாள்ளர்களின் பட்டியலின வெளியேற்றம் என்ற கோரிக்கை பரீசிலனையில் இருக்கின்றது
புதுச்சேரியில் நாராயணசாமி மீது அதிருப்தி இருப்பதால் எம்.எல்.ஏ ராஜினாமா செய்கின்றனர்
கிரண்பேடி நீக்கம் குறித்த கேள்விற்கு பாண்டிசேரி விடயத்தில் நான் பேசுவது நன்றாக இருக்காது என்று கூறினார்.