கோவை நாகராஜபுரம் அருகே உள்ள நரசாம்பதி குளம் சுமார் ‌200 ஏக்கர்‌பரப்பளவில் நீர்‌ நிரம்பி உள்ளது.‌இந்த குளத்தில் சுமார‌ 30 வயது மதிக்க தக்க ஆண் சடலம் குளத்தில் உடல் பாதி  மூழ்கியபடி முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடியும் கழுத்தில் சணல் கயிறு இறுகிய நிலையில் இருந்ததை கண்டு பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.‌

சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி , ஆர்.எஸ்.புரம்., செல்வபுரம் உள்ளிட்ட காவல்துறையினர் விரைந்து வந்தனர். மூன்று காவல் துறையினர் இடையே  எல்லை சரிவர தெரியாததால் காலை 7 மணி முதல்மதியம் 3 மணி வரையில் எந்த காவல் நிலைய எல்லைக்குள் வரும் என்பது தெரியாமல் பிணத்தை எடுக்காமல் வேடபட்டி , தெலுங்குபாளையம் ஆகிய கிராம நிர்வாக அலுவலர்கள் வந்தும் வருவாய் அலுவலர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை எடுக்க காவல்துறையினருக்கு எல்லையை உறுதி படுத்த முற்பட்டு உள்ளனர்.இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share to your friends.