முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மங்கல மேளங்கள் முழங்க மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து. கோவை. பிப்ரவரி. 15- கோவையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் .பி வேலுமணி சார்பாக தொடர்ந்து ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இன்று 123 ஏழைப் பெண்களுக்கு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை பேரூர் செட்டிபாளையத்தில் இதற்கென பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மேடைகள் வாழை மர தோரணங்கள் மணமகன் மணமகள் அறைகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் 123 ஜோடிகளுக்கு கட்டில் பீரோ மெத்தை பாத்திர பண்டங்கள் உட்பட அனைத்து சீர்களும் அழகாக வரிசைப்படுத்தப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சரியாக வளர்பிறை முகூர்த்தத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்த 123 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மங்கல மேளங்கள் முழங்க மாங்கலிய நான் எடுத்துக் கொடுக்கப்பட்டு திருமணம் கோலாகலமாக நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மணமக்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க முதல்வர் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். ஒவ்வொரு மக்களையும் அட்சதை தூவி ஆசீர்வதிப்பது நெகிழ்ச்சியாக இருந்தது.
திருமணத்துக்காக வரும் திருமண ஜோடிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

திருமண சீர்வரிசையாக கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சூட்கேஸ், கேஸ் ஸ்டவ், குத்து விளக்கு, சில்வர்குடம், குக்கர் உள்பட சமையலறை பொருட்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட 73 வகையான சீர் வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

முன்னதாக இந்த திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கியிருந்தனர். மணமக்களை பொதுமக்களும் திரளாக வந்து வாழ்த்தினர்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலவச திருமணத்துக்காக முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் 73 ஜோடிகளுக்கு பதிலாக 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது நமது வீட்டில் யாருக்காவது திருமணம் நடத்தினால் உள்ளன்போடு எப்படி திருமணம் நடத்தி வைப்போமோ அதைப்போல இந்த திருமணங்களும் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Share to your friends.