

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு “விக்” தயாரிக்க “கூந்தல் தானம்”நிகழ்வு மூலம் தங்களுடைய முடியை தானமாக வழங்கலாம்.
கீமோதெரபி சிகிச்சை
காரணமாக தலைமுடியை இழந்த புற்றுநோயாளிகளுக்கு விக் பொருத்த உதவும் முயற்சியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு
மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை
எடுத்துக்கொண்டவர்களில் பலர்”விக்” வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தானமாக “விக்” பெற்று அதை அவர்களுக்கு வழங்குவதற்காக
சென்னையைச் சேர்ந்த செரியன் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தானமாகப் பெறப்படும் முடிகள்
அடையாறு புற்றுநோய் நிறுவனம் மற்றும்பெங்களூரைச்
சேர்ந்த சங்கரா புற்றுநோய்
நிறுவனத்தைச் சேர்ந்த
நோயாளிகளுக்கு விக்குகள் தயாரிக்க வழங்கப்படும்.
இன்று 50-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் தங்களது முடியை தானம் செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.முடி நன்கொடையாளர்களில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
முடி தானம் செய்ய விரும்புவோர் முடியின் நுனியிலிருந்து 25 செ.மீ அளவுக்கு முடியை வெட்டித் தரலாம். ஹேர் பேண்ட் பயன்படுத்தி முடியை வெட்டலாம். தலைமுடியை வெட்டி ஐ.எம்.ஏ அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். மேலும்
விவரங்களுக்கு 8098812344 ஐ
டயல் செய்யுமாறு கேட்டுக்
கொண்டுள்ளனர்