CBE news 4
கோவையில் துப்புரவு பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை
கோவை
கோவையில் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட துப்புரவு பணியாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் அடுத்த பிகே புதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (40). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ரங்கசாமி நிரந்தர துப்புரவு பணியாளராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சீதா லட்சுமி மகப்பேறு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று மதியம் ரங்கசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டு பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.அந்த வீடியோவில் ரங்கசாமி, தான் சீதாலட்சுமி மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாகவும் தன்னை அங்கு வேலைக்கு வேண்டாம் என கூறியிருக்கிறார்கள் . மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியை பார்த்து வந்த இருவர் தனியாக ஒரு அறையில் இருப்பதை பார்த்ததாகவும் ,இதனை பழி வாங்கும் நோக்கில் செய்யாத தவரை செய்ததாக மேலிடத்தில் புகார் செய்து அவமானப்படுத்தியதாகவும், மேலும் தனது வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதற்கு காரணமாக இருந்த 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரங்கசாமி தற்கொலை செய்துள்ளார்.மேலும் அங்குள்ள பெண்கள் உடை மாற்றும் போது தான் போட்டோ வீடியோ எடுத்து விட்டேன் என என்னை பற்றி தவறாக கூறியுள்ளார்கள்.அங்குள்ள அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். எதாவது ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.நான் எந்த தவறும் செய்யவில்லை.நான் வேலைக்கு சென்று கையெழுத்து போட சென்றால் கையெழுத்து போட விடாமல் வார்டு ஆபிசுக்கு போக சொல்கிறார்கள்.ஒரு துப்புரவு பணியாளருக்கு இது நிகழ்ந்தால் , நான் எப்படி குடும்பத்தோடு வாழ முடியும் என்று பேசும் ரங்கசாமி தன்னுடைய சாவுக்கு சீதா லட்சுமி மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பேரின் பெயரையும் அதில் கூறி உள்ளார்.
தற்போது இந்த தற்கொலை வீடியோவானது வைரலாகி வருகிறது.
இந்த விடியோவை எடுத்த பின் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ரங்கசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பேசியதாக ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
தற்போது இவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share to your friends.