
கோவை மாநகர காவல் துறைக்கு தமிழ்நாடு அரசால் ரூ 47 லட்சம் செலவில் 2 டாய்லெட் வேன்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு வேன் ஆண்களுக்கும் மற்றொரு வேன் பெண்களுக்கும் பயன் படுத்தக்கூடியது.பெண் காவலர் டாய்லெட் வேனில் 2 வெஸ்டன் டாய்லெட் 2 இன்டியன் டாய்லெட் 1டிரஸ் சிங் .அறை உள்ளது .ஆண்காவலர் டாய்லெட் வேனில் 3 வெஸ்டன் டாய்லெட், 2 இன்டியன் பாய்லெட் பொறுத்த பட்டுள்ளது. நவீன முறையில் வடிவமைக்க பட்ட இந்த டாய்லெட் வேன் களின் சாவியை ஆயுத படை உதவி கமிஷனர் சிற்றரசிடம் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நூண்ணறிவு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் மணி வர்மன் பாண்டியன் சப்- இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த டாய்லெட் வேன்கள் பொது இடங்கள் மற்றும் வெளியிடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். ஒரு வேன் மதிப்பு ரூ23 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகும். இந்த வேன்களில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வசதி உள்ளது.