சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கர்நாடகாவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என்று அமமுக தொண்டர்களும்,சசிகலாவின் வழக்கறிஞர்களும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் கர்நாடக சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் சசிகலா அவர்களை சந்தித்து விடுதலை பத்திரத்தை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து மருத்துவ சிகிச்சை முடிந்த உடனோ அல்லது இன்று மாலையோ சசிகலா தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களும் அமமுக கட்சி ஆதரவாளர்களும் பட்டாசுகள் வெடித்து ஆரவாரத்துடன் சசிகலா அவர்களின் விடுதலையை கொண்டாடி வருகின்றனர்.

Share to your friends.