தமிழகத்தில் வருகின்ற மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டின் சட்டமன்ற கூட்டம் வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் உரையுடன் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற கூட்டத்திலேயே இடைக்கால பட்ஜெட் தாக்கலும் செய்யப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற மே மாதம் தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தற்சமயம் உள்ள அதிமுக அரசின் ஆட்சி காலத்திற்குரிய இறுதி சட்டமன்ற கூட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்..