பனைப்பொருட்கள் மற்றும் பனங்கள் மீதான தடையை நீக்க வேண்டும்  நாடார் அமைப்புகள் வேண்டுகோள்.
பல்வேறு இடையூறுகளை கடந்து, பல இன்னல்களை அனுபவித்து, பல நல் உயிர்களை இழந்து தங்களுடைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்தவர்களின் ஒருவராக திகழும் கராத்தே செல்வின் நாடார் அவர்களின் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்கள்.
பனை கள்  மீதான தடையை  மாநில அரசு உடனடியாக நீக்க வேண்டும். இது குறித்து புதிய வேளாண் சட்டத்தில் வரையறை செய்ய வேண்டும். தமிழகத்தில் பணங்கள்ளிற்கு  தடை என்றாலும் வெளிநாடுகளில் விற்பனை செய்ய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், பணங்கள்ளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக தங்களுடைய நாடார் சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் தரப் போவதாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்கும்போது காலம்காலமாக தங்களது இனம் அடிபட்டு, அவமானப்பட்டு வந்தேறிகள், சாணார்கள், நாடார்கள் என பல்வேறு அவமானங்களை சந்தித்து தற்சமயம் ஒரு சிலர் தங்களுடைய சமுதாயத்திலிருந்து மேல்மட்டத்திற்கு வந்திருந்தாலும் மீதமுள்ள 70 சதவீதத்திற்கும் மேலானவர்கள் இன்னும் வறுமையின் பிடியில் தான் உள்ளனர்.பனை மரம் ஏறுவது ஒன்று அவர்களது தொழில் என்றும் அதை விட்டு வேறு தொழில்கள் தெரியாது என்பதால் அவர்களது குடும்பத்தினர் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு வருவதாகவும், இதனால் பனங்கள் மற்றும் பனை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் அல்லது தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். உதாரணமாக கூற வேண்டுமென்றால் கஞ்சா பயன்படுத்துவதற்கு நமது தமிழக அரசும் இந்திய அரசும் தடை விதித்துள்ள போதிலும், மருந்து பொருளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. அதேபோலதான் பனங்கள்ளையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் தங்களுடைய சமுதாயம் ஒரு முன்னேற்ற பாதைக்கு செல்ல முடியும் என்றும் தெரிவித்தனர்.  இந்த நற்பணி மன்றத்தின் தலைவர் ராஜ் நாடாரும், பொதுச் செயலாளர் அலெக்ஸ் நாடாரும்  கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களுடைய தீர்மானங்களை பேட்டியாக கொடுத்துள்ளனர். இந்த நற்பணி மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் உள்ளனர் அதிலும் ஆளும் அதிமுக சேர்ந்தவர்களும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மிகப் பிரபலமான வழக்கறிஞர் இந்த நற்பணி மன்றத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவதால் நிச்சயமாக புதிய வேளாண் சட்டத்தில் பனைத்தொழில் குறித்தான திருத்தங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் (குறள் 104)
            

திருவள்ளுவர் பாடி வெச்சிருக்காரு. அதாவது, ஒருத்தர் செய்யுற தினையளவு நன்மை கூட, நன்றியுள்ள மனுஷனுக்கு பனை அளவுக்குத் தெரியும்ங்கிறதுதான், இந்த பாட்டோட அர்த்தம். பனை மரம் தர்ற பலன்களை அனுபவிச்சு தெரிஞ்சுக்கிட்டதால, அதை குறள்ல நல்லாவே பயன்படுத்தியிருக்கார் திருவள்ளுவர். ஆனா, நாம, அற்புதமான இந்த பனைமரங்களை, அதனுடைய ஆயுள் முடியறதுக்கு முன்னயே வெட்டி வெட்டி, செங்கல் சூளைக்கு அனுப்பிக்கிட்டிருக்கோம்.

ஒரு பனை மரத்தில இருந்து, ஒரு வருஷத்துக்கு பதநீர்-180 லிட்டர், பனை வெல்லம் – 25 கிலோ, பனஞ்சீனி – 16 கிலோ, தும்பு (மிதியடி, பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) – 11.4 கிலோ, ஈக்கு – 2.25 கிலோ, விறகு – 10, கிலோ, ஓலை – 10 கிலோ, நார் – 20 கிலோ…. அளவுக்குக் கிடைக்குதுனு விஞ்ஞானிங்க பட்டியல் போட்டு சொல்லியிருக்காங்க. தென்னை மரத்தோட ஒப்பிட்டா, பனை மரத்துலதான் நிறைய பலன் உண்டு. ஆனா, தென்னை மரத்தைக் கொண்டாடுற மாதிரி, பனை மரத்தை நாம கொண்டாடுறதில்ல. நம்மளோட தயவு இல்லாமலே, மகசூல் கொடுக்கிற பனை மரத்துக்கு இனிமேலாவது நன்றி சொல்வோம்.
பனைமரங்கள் மீதான ஒரு விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் பரவியுள்ளது விரைவில் தமிழக அரசு இவரது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்பதில் ஐயமில்லை.

Share to your friends.