கோவையைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான யு எம் டி ராஜா என்பவர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி 100 மில்லிகிராம் அளவில் தங்கத்தை கொண்டு கரும்புகள், பொங்கல் பானைகள்,காளைகள்,சேவல் என ஒரு பிளேடின் முனையில் வைக்கக் கூடிய அளவில் சிற்பங்களை செய்து உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு மத விழாவினை சிறப்பிக்கும் வகையிலும், தேசிய தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையிலும் தங்கத்தைக் கொண்டு பல நுண்ணிய சிற்பங்களை செய்து அனைவரின் பாராட்டை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share to your friends.