பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இம்மாதம் 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை நீதிபதிகள் கேட்டிருந்தனர். அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு முக்கியமான தகவலை தெரிவித்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளார். அவர் விடுதலையான பிறகு வழக்கு பற்றி அவரிடம் கூடுதல் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் பதில் அளிக்க விரும்புகிறோம் என கூறினார்.
எனவே இந்த வருடம் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் அதற்கு முக்கிய காரணமாக சசிகலா இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனால் சசிகலா வருகையை அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், அவர் விடுதலையானதும் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாமல் இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். பொருத்திருந்து பார்க்கலாம்.

Share to your friends.