கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கிலேயர் காலத்தில் 1862ம் ஆண்டு முதல் விவசாய பயிராக காப்பி பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வந்தது இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன் அடைந்து வந்தனர் இந்நிலையில் தொடர்ந்து நோய்த்தொற்று மற்றும் விளைச்சல் குறைவு காரணமாகவும் தேயிலை வரவு காரணமாகவும் பெரும்பாலான பகுதிகள் காப்பி அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டுள்ளது தற்போது 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே காபி விவசாயம் நடைபெற்று வருகிறது. வால்பாறையை அடுத்த வரட்டுப் பாறை எஸ்டேட் பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து செடிகளில் காப்பி பழங்கள் பழுத்து அறுவடைக்கு தயாராக உள்ளது இந்த பயிரானது டாடா காபி எஸ்டேட்டில் ஏராளமான அளவில் பயிரிடப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை விளைச்சல் தரக்கூடியது பதப்படுத்தும் பணியில் ஏராளமான பணியாளர்களை வைத்து பதப்படுத்தி பின்னர் தமிழகத்தில் தேனி மாவட்டம் மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கு பதப்படுத்தபட்டு அனுப்பப்படுகிறது இதன் காரணமாக பழுத்த பழங்களை அறுவடை செய்வது களத்திற்கு கொண்டு செல்வது காப்பி பழங்களை அரைத்து உலர வைத்து பதப்படுத்தும் பணியில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
