இந்திய இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டரங்கத்தில் 18.01.2021 முதல் 30.01.2021 வரை நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்குநர்(ஆள்சேர்ப்பு) கர்னல் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமதுரைமுருகன், பாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.மதுராந்தகி, வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.முத்துராமலிங்கம், மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்துன் கீழ் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 11 மாவட்டங்களுல் இருந்து ஆட்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம் 18.01.2021 முதல் 30.01.2021 வரை பாரதியார் பல்கலைகழக விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு இணைய வழியாக ஏற்கனவே, விளர்ணப்பத்திருந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு சீட்டை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், நுழைவு சீட்டு கொண்டுவரும் தேர்வர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

அதிக அளவிலான நபர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 500 பேர்கொண்ட குழுவாக நான்கு வெவ்வேறு இடங்களில் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தனியாக முகாம் டோக்கன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பத்தாரர்கள் இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர் 0422-2222022 maim தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இம்முகாம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவுள்ளது விண்ணப்பதாரர்கள் யாரும், வேலை பெற்றுதருவதாக கூறும் மோசடி நபர்களை நம்பி ஏமாறவேண்டும். தகுதியின் அடிப்படையில்தான் இத்தேர்வு நடைபெறும். எனவே, இந்த நல்லவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share to your friends.