கோவையை அடுத்த இருகூரில்,ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் கோவை அருகே உள்ள இருகூருக்கு ஐந்து இலட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இருகூரில் உள்ள பஞ்சு மில்லில்  பஞ்சு மூட்டைகளை வேண்டாம் என்று திருப்பி அனுப்பியதால் மீண்டும் ஊத்துக்குளி யை நோக்கி செல்வதற்காக லாரியை திருப்பிய ஓட்டுனர் வடிவேல் (வயது 27)   எதிர்பாராத விதமாக அருகில் உள்ள மின்சார கம்பி மீது உராய்ந்ததால் திடீரென்று தீ பிடித்தது. பஞ்சில் பிடித்த தீ மளமளவென்று ஏறிய ஆரம்பித்ததால் லாரி ஓட்டுனர்  லாரியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பினார். தகவலறிந்த சூலூர் மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய்ய அதிகாரி கோபால் தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த 15 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. ரூபாய் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள லாரி காப்பாற்றப்பட்டது.

Share to your friends.