நான்கு சக்கர வாகனங்களில் விபத்துகளில் வாகன சேதங்களை தவிர்ப்பதற்காக முன்பகுதியில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதுதவிர, தற்போது ஐகோர்ட்டும் தமிழகத்தில் வாகனங்களில் இதுபோன்று பம்பர் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் அரசின் வழிகாட்டுதலின்படி வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை வட்டார போக்குவரத்து அலுவலகர்கள் சாலையில் செல்லும் டாட்டா ஏசி ஆட்டோக்கள் ,கார்கள் ஆகிய வாகனங்களை வழி மறைத்து பம்பரை கழட்ட வைத்து அபராதம் விதித்தனர். மேலும் இது போன்று பொருத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

Share to your friends.

You missed