கோவையில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் பெருகி வருகின்றது. காவல்துறையினரும் பல்வேறு விதமான முயற்சிகள் செய்தும் இதுவரை இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு கிடைக்கவில்லை. தனிப்படைகள் அமைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. மீண்டும் நேற்றைய தினம் கோவை கரும்பு கடை வீதியில் நடந்து சென்ற சிறுவனின் செல்போன் பறிப்பு சம்பவம், கோவை கணபதி மாநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு சம்பவம், அன்னூர் கோவில்பாளையம் 20 பவுன் தங்க நகை 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ரொக்கம் கொள்ளை சம்பவம் போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து கூறும்போது கோவையிலுள்ள காவல்துறையினர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே சென்று விடுகின்றனர் அதனால் ஒதுக்குபுறமாக உள்ள வீடுகளில் எந்த ஒரு ரோந்து பணியிலும் ஈடுபடுவதில்லை இதனால் தான் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் எனவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் விதமாக காவல்துறையினர் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பகுதியிலும் ரோந்து சென்றால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share to your friends.

You missed