மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவுக்கு பத்திரிகையாளர்கள் யாரும் வர வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது. மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகரில், மக்கள் நலச்சங்கம் சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

பத்திரிகையாளர்கள் முன்பாக, ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையாகி விடுவதால், நேற்றைய நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் யாரும் வர வேண்டாம் என உதவியாளர் மூலம் அமைச்சர் கேட்டுக்கொண்டார். கட்சி ஆதரவு ஊடகத்தை சேர்ந்த 2 நிருபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதை மீறி, ஒரு சிலர் பேட்டி என அமைச்சரிடம் கேட்டபோது, அவர்களை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பி சென்றுவிட்டார். அமைச்சர் பேசுகையில், ”நான் இந்த தொகுதி எம்எல்ஏ. வரும் தேர்தலிலும் ஆதரிக்க வேண்டும்” என்றார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் கூறினார். இரு தினங்களுக்கு முன் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ தவறாக கூறியதால், அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

Share to your friends.