வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து கோவை கருமத்தம்பட்டியில் அண்ணாமலை பேசினார். அப்போது, கருத்து தெரிவித்த அவர், தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 என தருவதுதான் தமிழக அரசியல் என்று கூறினார். பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் அண்ணாமலை இப்படி பேசியிருக்கிறார்.

மேலும், பாஜகவுக்கு ஓட்டு போடாவிட்டால் கார் டயரை விழுந்து கும்பிடுபவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள் என
அவர் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.