கொரோனா காலத்தில் வறியவர்களுக்கு உதவ 8 சொத்துக்களை அடமானம் வைத்து 10 கோடி அளவிற்கு உதவி செய்தார்.நடிகர் சோனு சூட்.
கொரோனா காலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் உதவி செய்வதற்காகவே மும்பையில் தனக்கு இருக்கும் 8 சொத்துக்களை அடமானம் வைத்து 10 கோடி ரூபாயை பாலிவுட் நடிகர் சோனு சூட் திரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொரோனா காலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், மேலும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் உதவிய  நடிகர் சோனு சூட், அவரது மனிதநேய முயற்சிகளுக்காக உலகின் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலை இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட Eastern eye செய்தித்தாள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலக மக்களுக்கு தங்கள் செயல்பாடுகள், நடவடிக்கைகள் மூலமாக நேர்மறையான எண்ணத்தைத் தரும் கலைஞராக சோனு சூட் இடம்பிடித்துள்ளார்.
”தொற்று நோய் பரவத் தொடங்கியபோது, நாட்டு மக்களுக்கு உதவுவது எனது முடிவெடுத்தது ஆர்மார்த்தமான முடிவு” என சோனு சூட் தெரிவித்துள்ளார். தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தை ஏற்பதாகவும், மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரால் உதவி செய்யப்பட்ட கிராம மக்கள் இவருக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ளனர்.ஒரு நடிகருக்காக கோவில் கட்டியது இதுதான் முதல்முறை என்கின்றனர்.அந்த கிராம மக்கள்.

Share to your friends.