கோவை செல்வபுரம் அசோக் நகரைச் சேர்ந்த தங்க நகை பட்டறை உரிமையாளர் ஒருவர் நகரில் பல்வேறு நகைக்கடைகளில் தங்க கட்டிகள் ஆர்டரின் பேரில் வாங்கி தங்க நகைகளாக வடிவமைத்துக் கொடுத்து வந்தார். இவர் நகரில் 15-க்கும் மேற்பட்ட நகைக்கடை நிர்வாகத்தினரிடம் இருந்து 25 கிலோ விற்கும் அதிகமாக தங்கக்கட்டிகள் வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தங்க கட்டிகளுடன் பட்டறை உரிமையாளர் மாயமாகிவிட்டார். தங்கக்கட்டிகளை தரவில்லை. ஆபரணமாக வடிவமைத்தும் கொடுக்கவில்லை. அவர் மொத்த தங்க நகைகளை கடத்தி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செல்வபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். அதிக எடை கொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் ஒரு நபரிடம் மொத்தமாக ஒப்படைத்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மாயமான தங்க நகை பட்டறை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக இதுவரை போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. கடந்த ஆண்டில் கோவை நகரில் இதே போல பல கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்க கட்டிகளுடன் ஒருவர் மாயமானார். போலீசில் புகார் அளித்து விசாரித்து வந்த நிலையில் தங்க கட்டியை கடத்தியதாக கூறப்பட்ட நபர் சிக்கினார். இதை தொடர்ந்து புகார் அளித்த வர்கள். தங்களது புகாரை வாபஸ் பெற்றனர். வழக்குபதிவு செய்யாமல் கடத்தல் புகார் முடிவுக்கு வந்தது. தற்போதும் இதேபோல் புகார் வந்திருக்கிறது. தங்கக்கட்டி நகை தயாரிப்பு தொழில் நம்பிக்கை அடிப்படையில் நடப்பதாக தெரிகிறது. முறையான ஆதாரம் ஆவணங்களுடன் தங்கக்கட்டிகள் நகைகள் கையாள படுவதில்லை. வருமான வரி விவகாரம் காரணமாக ஆவணங்களை பலரும் பின்பற்றுவதில்லை என தெரிகிறது. நம்பிக்கை மோசடி யாக ஒருவர் தங்கக்கட்டிகள் கடத்திச் சென்றால். அவரை பிடித்து தங்கத்தை மீட்க போலீசார் அவரை அணுகுவது வாடிக்கையாக இருக்கிறது. சில மாதம் முன்பு தங்கக் கட்டியை கடத்திச் சென்ற வடமாநில வாலிபரை பிடிக்க தங்கநகை உரிமையாளர்கள் கோவை போலீசை அணுகினர். போலீசாரை விமானத்தில் அனுப்பி வைத்து கடத்திச் சென்ற வரை ஒரே நாளில் மடக்கிப்பிடித்தனர். தற்போது வந்துள்ள தங்கக்கட்டி கடத்தல் புகார் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது : – புகார் உண்மையானதா என விசாரிக்கிறோம். சரியாக இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share to your friends.