கோவையில் குறைந்தது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை. டின் காளிதாஸ் தகவல்.
கோவை. டிசம்பர். 16- கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நோயாளிகளுக்கு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் இதற்காக 555 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளது. மருத்துவமனையில் 80% படுக்கைகள் காலியாக இருக்கிறது. மாநகராட்சி பகுதியில் எடுக்கப்படும் மாதிரிகளில் 400 பேரில் நால்வருக்கு மட்டுமே தொட்டு உறுதியாகிறது. கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில் – கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினமும் 12 முதல் 15 பேர் மட்டுமே அட்மினாக ஆகின்றனர். கொரோனாவால் தற்போது 102 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிப்பு குறைந்த போதும் படுக்கை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. வரும் ஜனவரி 15 வரை தற்போதுள்ள 555 படுக்கைகள் இருக்கும். முந்தைய ஆண்டுகளைவிட நடப்பாண்டில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது என்றார்.

Share to your friends.