கோவையில் இரயில் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலிசாருக்கும் கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு வாபஸ் வாங்க வலியுறுத்தியும் , அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினார். இப்போரட்டத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் மற்றும் சென்னை + சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரியும், விவசாயிகளிடமிருந்து  இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை ஒப்படைக்கக் கோரியும், மனிதநேய  மக்கள் கட்சியின் சார்பாக இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போரட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்..

Share to your friends.