கோவை ரத்னபுரி பிக்பாக்கெட் மன்னன் பிரபு காவல் துறையினர் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். காவல் துறையினர் இவனை பிடிக்க பல முயற்சிகளை மேற்க்கொண்டு பிடித்தனர். அவிநாசி சிறையில் அடைப்பதற்க்காக அரசு மருத்துவமனைக்கு கைதிகளுக்கான பரிசோதனை செய்வதற்காக ரத்னபுரி போலிஸார் அழைத்துசென்றனர். இந்த நிலையில் காவல் துறையினரின் கட்டுப்பாட்டை இலகுவாக கடந்து போலிஸாரை கீழே தள்ளிவிட்டுவிட்டு தப்பி சென்றான். கோவையில் அரசு மருத்துவமனையில் காவலர்களை தள்ளிவிட்டுவிட்டு தப்பித்த பிக்பாக்கெட் மன்னனால் பரபரப்பு ஏற்பட்டது. பிக் பாக்கெட் மன்னன் பிரபு மீது வழக்குகள் ஏராளமாக உள்ளது என்பதால் அவனை பிடிக்க போலிஸார் தேடுதல் வேட்டையை மீண்டும் துவங்கியுள்ளனர்.

Share to your friends.